/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மொபைல் போன், நகை பறிப்பு ராமாபுரத்தில் இருவர் கைது
/
மொபைல் போன், நகை பறிப்பு ராமாபுரத்தில் இருவர் கைது
மொபைல் போன், நகை பறிப்பு ராமாபுரத்தில் இருவர் கைது
மொபைல் போன், நகை பறிப்பு ராமாபுரத்தில் இருவர் கைது
ADDED : ஏப் 20, 2025 12:11 AM
ராமாபுரம், ராமாபுரம், வெங்கடேஸ்வரா நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் அப்ரோஸ், 29. இவர், வீட்டின் அருகே ஹோட்டல் நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம், இவரது மனைவியுடன் ஹோட்டலில் இருந்த போது, இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர், சப்பாத்தி பார்சல் கேட்டு விட்டு, சப்பாத்தியை வாங்காமல் அவசரம் அவசரமாக கிளம்பியுள்ளார்.
சிறிது நேரம் கழித்து, மேசையின் மீது வைத்திருந்த மொபைல் போன் காணாமல் போனது தெரியவந்தது.
இது குறித்து, ராமாபுரம் போலீசார் விசாரித்து, சம்பவத்தில் ஈடுபட்ட ராயப்பேட்டை, லாயிட்ஸ் சாலையை சேர்ந்த வினோத்குமார், 29, என்பவரை, போலீசார் கைது செய்தனர்.
அதேபோல், ராமாபுரம், செந்தமிழ் நகர் பகுதியைச் சேர்ந்த மணி, 40, என்பவர், மது போதையில் சாலையில் துாங்கி கொண்டிருந்தார்.
அப்போது, அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக கூறி, அவரிடம் இருந்த இரண்டு கிராம் மோதிரம் மற்றும் மொபைல் போனை மர்ம நபர் திருடிச் சென்றார்.
இது குறித்து விசாரித்த ராமாபுரம் போலீசார், ராமாபுரம், திருமலை நகரை சேர்ந்த பாஸ்கர், 37, என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து இரண்டு கிராம் மோதிரம், மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது.

