/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'மெத்தகுலோன்' வைத்திருந்த இருவர் ராயப்பேட்டையில் கைது
/
'மெத்தகுலோன்' வைத்திருந்த இருவர் ராயப்பேட்டையில் கைது
'மெத்தகுலோன்' வைத்திருந்த இருவர் ராயப்பேட்டையில் கைது
'மெத்தகுலோன்' வைத்திருந்த இருவர் ராயப்பேட்டையில் கைது
ADDED : மார் 27, 2025 11:59 PM

சென்னை, ராயப்பேட்டை இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் பீட்டர்ஸ் சாலையில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். அதனால், அவர்களின் உடைமைகளை சோதனை செய்தனர்.
அதில், 2.8 கிராம் எடையிலான மெத்தகுலோன் என்ற போதைப் பொருள் வைத்திருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து, அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த மனோஜ்குமார், 23, கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த சந்தோஷ், 25, என்பது தெரியவந்தது.
நேற்று, இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மனோஜ்குமார் மீது, ஏற்கனவே மூன்று குற்ற வழக்குகள் உள்ளன.