ADDED : ஜூன் 09, 2025 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சென்னை, தி.நகர், தெற்கு உஸ்மான் சாலையில் 'தோகா ஸ்நாக்ஸ்' என்ற கடை செயல்பட்டு வருகிறது. இக்கடையில் முபாரக், 34, அப்சல், 35, ஆகியோர், நண்பர்களுடன் சேர்ந்து பணிபுரிந்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் பக்ரீத் பண்டிகையை ஒட்டி, ஹோட்டலில் பணிபுரிவோருக்காக இரவு 10:00 மணியளவில், இருவரும் குக்கரில் இறைச்சியை வேக வைத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, குக்கரை திறக்க முபாரக் முயலும்போது திடீரென வெடித்ததில், முபாரக் மற்றும் அப்சல் காயமடைந்தனர். உடனே, நண்பர்கள் அவர்களை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
முபாரக்கிற்கு கண்கள் மற்றும் நெற்றில் வீக்கம் ஏற்பட்டதால், உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். அப்சல் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இச்சம்பவம் குறித்து, மாம்பலம் போலீசார் விசாரிக்கின்றனர்.