/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'பைக்'குகள் நேருக்கு நேர் மோதல் இருவர் பலி; ஒருவர் படுகாயம்
/
'பைக்'குகள் நேருக்கு நேர் மோதல் இருவர் பலி; ஒருவர் படுகாயம்
'பைக்'குகள் நேருக்கு நேர் மோதல் இருவர் பலி; ஒருவர் படுகாயம்
'பைக்'குகள் நேருக்கு நேர் மோதல் இருவர் பலி; ஒருவர் படுகாயம்
ADDED : அக் 17, 2024 12:25 AM

மறைமலை நகர், காஞ்சிபுரம் மாவட்டம், சாத்தனஞ்சேரியைச் சேர்ந்தோர் குணசேகரன், 46, ஆனந்தன், 40. இருவரும், நேற்று முன்தினம், ஆத்துார் பழத்தோட்டம் நோக்கி, தன் 'ஸ்பிளண்டர் பிளஸ்' பைக்கில் சென்றனர். பைக்கை குணசேகரன் ஓட்டினார்.
காவூர் பாலாற்று மேம்பாலம் அருகே, எதிரே வந்த காவூர் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன், 36, என்பவரின் 'பஜாஜ் பல்சர்' பைக், குணசேகரனின் பைக் மீது வேகமாக மோதியது.
இதில் படுகாயம் அடைந்த குணசேகரன், ஆனந்தன் இருவரும், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
காயங்களுடன் மயக்கமடைந்த கண்ணனை, அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு, '108' ஆம்புலன்ஸ் வாயிலாக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு தாலுகா போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.