ADDED : ஜன 26, 2024 12:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திரு.வி.க.நகர்,பெரம்பூர், ராகவன் தெருவை சேர்ந்தவர் ஜோதிமணி, 47. இவர், ரயில்வேயில் டி.டி.ஆராக பணியாற்றி வருகிறார். கடந்த 16ம் தேதி மனைவி மற்றும் 3 வயது மகனுடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது, மது போதையில் இருந்த இருவர், இருசக்கர வாகனத்தின் முன் கட்டையை துாக்கி போட்டு, ஜோதிமணி உள்ளிட்டவர்களை கீழே விழ வைத்துள்ளனர்.
மேலும், அவரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளனர். இதுகுறித்து ஜோதிமணி திரு.வி.க.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில், பெரம்பூரை சேர்ந்த ராகேஷ், 19 மற்றும் ராகுல், 19, ஆகியோர் பெற்றோருடன் வந்து, நேற்று முன்தினம் திரு.வி.க.நகர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இருவரையும் கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

