/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கத்தியுடன் சுற்றிதிரிந்த ரவுடிகள் இருவர் கைது
/
கத்தியுடன் சுற்றிதிரிந்த ரவுடிகள் இருவர் கைது
ADDED : ஏப் 21, 2025 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேசின் பாலம்:பேசின் பாலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட சால்ட் கொட்ரஸ் பகுதியில் கத்தியுடன் இருவர் சுற்றித் திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு நேற்று சென்ற பேசின் பாலம் போலீசார், இருவரிடம் சோதனை செய்த போது, அவர்களிடம் ஒன்றரை கிலோ கஞ்சா, ஒரு கத்தி இருந்தது.
விசாரணையில், புளியந்தோப்பு, சிவராஜபுரத்தைச் சேர்ந்த மட்ட அஜித், 27 மற்றும் கோழி பாபு, 29 என தெரிந்தது. ரவுடிகளான இவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. போலீசார், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

