/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாத வாடகை ரூ.84,000 நிர்ணயித்ததால் சிக்கல் உதயநிதி திறந்த கல்லுாரி கேன்டீனுக்கு 'பூட்டு'

ADDED : ஆக 14, 2025 12:30 AM

சென்னை, சென்னை மாநில கல்லுாரியில், துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்த, 'கேன்டீன்' கட்டடத்திற்கு, 84,000 ரூபாய் மாத வாடகை நிர்ணயம் செய்ததால், இழுத்து மூடப்பட்டுள்ளது.
சென்னை மாநில கல்லுாரி வளாகத்தில், பல ஆண்டுகளாக ஒரு சிறிய கேன்டீன் இயங்கி வந்தது. இந்த சூழலில், கல்லுாரிக்கு புதிய கேன்டீன் கட்ட, கல்லுாரி நிர்வாகம் முடிவு செய்தது.
பொதுப்பணித் துறை சார்பில், 78 லட்சம் ரூபாய் மதிப்பில், ஒரு பிரமாண்ட கேன்டீன் கட்டப்பட்டது. கடந்த மார்ச் 1ல், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளன்று, துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்.
'இந்த கேன்டீன் வளாக வசதியை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள, மாணவர்கள் உட்பட கல்லுாரியின் அனைத்து தரப்பினரையும் வாழ்த்தி மகிழ்ந்தோம்' என, சமூக வலைதள பக்கத்தில் உதயநிதி பதிவிட்டார்.
அதன்பின், ஏற்கனவே கல்லுாரியில் கேன்டீன் நடத்தியவர்களே, புதிய கேன்டீனை ஒரு மாதம் நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், புதிய கேன்டீனுக்கு மாதம், 84,000 ரூபாய் வாடகையை பொதுப்பணித்துறை நிர்ணயித்தது. இதனால், கேன்டீன் நடத்தியவர் அதிர்ச்சி அடைந்து, 'இந்த கேன்டீன் வேண்டாம்' என கூறி, இரும்பு தகடுகளால் அமைக்கப்பட்ட பழைய இடத்திற்கே சென்றுவிட்டார்.
துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்த கேன்டீனுக்கு, நான்கு மாதங்களாக பூட்டு போடப்பட்டுள்ளது, மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.