/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பயன்பாட்டில் இல்லாத ஆவின் பாலகம் அகற்றி நுாலகம் அமைக்க வலியுறுத்தல்
/
பயன்பாட்டில் இல்லாத ஆவின் பாலகம் அகற்றி நுாலகம் அமைக்க வலியுறுத்தல்
பயன்பாட்டில் இல்லாத ஆவின் பாலகம் அகற்றி நுாலகம் அமைக்க வலியுறுத்தல்
பயன்பாட்டில் இல்லாத ஆவின் பாலகம் அகற்றி நுாலகம் அமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜன 01, 2025 12:46 AM

புழுதிவாக்கம்,புழுதிவாக்கத்தில், 15 ஆண்டாக செயல்பாட்டில் இல்லாத ஆவின் பாலகம் கட்டடத்தை அகற்றி, அதில் மாணவர்கள், மக்கள் பயனுறும் வகையில் நுாலகம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து அப்பகுதியினர் கூறியதாவது:
பெருங்குடி மண்டலம், வார்டு 185, உள்ளகரம், ஜகதாம்பாள் காலனி, சீனிவாசன் தெருவில், 250 சதுர அடி பரப்பில், 30 ஆண்டிற்கு முன் ஆவின் பாலகம் அமைக்கப்பட்டது.
அகலம் குறுகலாகவும், முட்டு சந்தாகவும் இருந்ததால், இத்தெருவில் நான்கு சக்கர வாகனங்கள் சென்றுவர போதிய இட வசதி இல்லை.இந்நிலையில், 15 ஆண்டிற்கு முன், அந்த பாலகம் மூடப்பட்டு, வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது.
தொடர்ந்து, அந்த இடத்தில் நுாலகம் அமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் சார்பில் பலமுறை கோரிக்கை வைத்தும், நடவடிக்கை இல்லை.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி, 15 ஆண்டாக பயன்பாடில்லாமல் மூடிக்கிடக்கும் அந்த கட்டடத்தை அகற்றி, மாணவர்கள், மக்கள் பயன் பெறும் வகையில் நுாலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.
வார்டு கவுன்சிலர் சர்மிளா தேவி கூறியதாவது:
பகுதிவாசிகளின் கோரிக்கைப்படி நுாலகம் அமைக்கும்படி, பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளேன். ஆனால், நடவடிக்கை இல்லை.
ஆவின் பாலகம் அருகே இருந்த பூங்கா அகற்றப்பட்டு, அதில் அம்மா உணவகம் அமைக்கப்பட்டது. ஆனால், அம்மா உணவகத்தை யாரும் பயன்படுத்தவில்லை. எனவே, அம்மா உணவகத்தை மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிக்கு மாற்ற வேண்டும் என்றும், தொடர்ந்து கோரி வருகிறோம்.
இவ்வாறு கூறினார்.

