/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பணம் ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்து
/
பணம் ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்து
ADDED : ஆக 18, 2025 02:47 AM
சென்னை:சூளைமேடு பகுதியில், பணம் ஏற்றி சென்ற வேன் மையத்தடுப்பில் மோதி, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சூளைமேடு பகுதியில் உள்ள ஏ.டி.எம்., மையங்களில் உள்ள இயந்திரங்களில் பணம் நிரப்ப, ஒன்றரை கோடி ரூபாயுடன், நேற்று முன்தினம் இரவு வேன் சென்றது.
சூளைமேடு நமச்சிவாயபுரம் பாலம் அருகே வேன் சென்றபோது, பெரிய கல் மீது ஏறியதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலை மையத்தடுப்பில் மோதி கவிழ்ந்தது. அப்போது, வேனிற்கு பின்னால், இரு சக்கர வாகனத்தில் வந்த ஷோபனா, 48, என்பவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவருக்கு, வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. வேன் ஓட்டுநர் கிஷோரும் காயமடைந்தார்.
அண்ணா நகர் போக்குவரத்து போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து கவிழ்ந்து கிடந்த வேனை மீட்டனர். மேலும், அதில் இருந்த ஒன்றரை கோடி ரூபாயை, துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படை வீரர் பாதுகாப்புடன், மாற்று வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தொடர் விசாரணை நடக்கிறது.