/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேளச்சேரி ஏரி ஆக்கிரமிப்பு மீண்டும் கணக்கெடுப்பு
/
வேளச்சேரி ஏரி ஆக்கிரமிப்பு மீண்டும் கணக்கெடுப்பு
ADDED : நவ 21, 2024 12:30 AM
சென்னை, சென்னையின் முக்கிய ஏரியாக, வேளச்சேரி ஏரி உள்ளது. மொத்தம், 265 ஏக்கர் பரப்பில் இருந்த ஏரி, அரசு திட்டங்கள், சாலை விரிவாக்கம்போக, தற்போது, 55 ஏக்கர் பரப்பாக சுருங்கிவிட்டது.
இங்கு, சி.எம்.டி.ஏ., சார்பில், 19.40 கோடி ரூபாயில், படகு சவாரியுடன், 1.91 ஏக்கர் பரப்பில் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணியை, அக்., 30ல் முதல்வர் துவக்கி வைத்தார்.
ஏரி நீர்ப்பிடிப்பு மற்றும் கரையில், 2,650க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் உள்ளன. முதற்கட்டமாக, 950 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றி, ஏரி நீர்ப்பிடிப்பை, 22 சதவீதம் அதிகரிக்க, முடிவு செய்யப்பட்டு உள்ளது.
பயோமெட்ரிக் கணக்கெடுப்பு பணி துவங்கிய நிலையில் வேளச்சேரி எம்.எல்.ஏ., ஹசன் மவுலானா, ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக பேசி, பணியை நிறுத்தினார்.
படகு சவாரி, பூங்கா அமைக்க இடையூறாக உள்ளதால், 950 ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, உயரதிகாரிகள் கூறி உள்ளனர்.
இதைத்தொடர்ந்து, நேற்று, கணக்கெடுப்பு மீண்டும் துவங்கியது. இதில், 70 வீடுகளுக்கு பயோமெட்ரிக் எடுக்கப்பட்டது. மீதமுள்ள வீடுகளுக்கு, கணக்கெடுப்பு நடத்தப்படும் என, அதிகாரிகள் கூறினர்.