/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரயில்வே சாலை பணி முடிந்தது வில்லிவாக்கம் பகுதியினர் மகிழ்ச்சி
/
ரயில்வே சாலை பணி முடிந்தது வில்லிவாக்கம் பகுதியினர் மகிழ்ச்சி
ரயில்வே சாலை பணி முடிந்தது வில்லிவாக்கம் பகுதியினர் மகிழ்ச்சி
ரயில்வே சாலை பணி முடிந்தது வில்லிவாக்கம் பகுதியினர் மகிழ்ச்சி
ADDED : ஜன 30, 2025 12:32 AM

வில்லிவாக்கம்: அண்ணா நகர் மண்டலம், வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகில், ரயில்வே சர்வீஸ் சாலை உள்ளது.
ரயில்வேக்கு சொந்தமான இந்த சாலையின் ஒரு பகுதியில், வில்லிவாக்கம் சந்தை செயல்படுகிறது.
இந்த சாலையை கடந்து, வில்லிவாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர்.
மக்கள் பயன்பாடு அதிகமுள்ள இந்த சாலையில், குறைந்தபட்ச பராமரிப்பு கூட இல்லாமல், ரயில்வே அலட்சியமாக இருந்தது. தவிர, ஆக்கிரமிப்பு மற்றும் குண்டும் - குழியுமாக இருப்பதை காரணம் காட்டி, புதிதாக சாலை அமைக்காமல் இருந்தது.
இதுகுறித்து, நம் நாளிதழில் பல முறை சுட்டிக் காட்டிய பின், 2022 ஆக., 5ல், ரயில்வே சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. பின், புதிதாக சாலை அமைக்கும் பணியை துவக்கியது.
ஒரு பகுதியில், கான்கிரீட் சாலையை அரைகுறையாக அமைத்ததால், ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மழைக்காலத்தில் குளம்போல் தண்ணீர் தேங்கியது.
இதுகுறித்தும், நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியான நிலையில், கடந்த செப்., மாதம் புதிதாக திட்ட அறிக்கை தயாரித்து, சாலையை அமைக்கும் பணியை மீண்டும் துவக்கியது.
முதற்கட்டமாக, ரயில் நிலையத்தில் இருந்து, சுரங்க பாலம் வரை, கடந்த மாதம் புதிய கான்கிரீட் சாலையை அமைத்தது.
தற்போது, அங்கிருந்து ஐ.சி.எப்., மேம்பாலம் வரை அமைக்கப்பட்டு, பணி நிறைவடைந்துள்ளது. நீண்ட நாள் நிலவிய பிரச்னைக்கு தீர்வு கிடைத்ததால், வில்லிவாக்கம் மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

