/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஓராண்டாச்சு தார்ச்சாலைக்கு காத்திருப்பு
/
ஓராண்டாச்சு தார்ச்சாலைக்கு காத்திருப்பு
ADDED : மே 07, 2024 12:28 AM

ஜல்லி கொட்டி ஓராண்டாச்சு தார்ச்சாலைக்கு காத்திருப்பு
ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 18வது வார்டில், பட்டாபிராம், காந்தி நகர் இரண்டாவது தெரு, கக்கன்ஜி தெருவில், 30க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், இங்கிருந்த தார்ச்சாலை சிதிலமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் மாறியது.
இந்த நிலையில், தார்ச்சாலை அமைக்க கருங்கல் ஜல்லி கொட்டப்பட்டு ஓராண்டுகள் ஆன நிலையில், சாலை அமைக்காமல் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர்.
இதனால், இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஜல்லியில் இடறி விழுந்து காயங்கள் அடைகின்றனர்.
மேலும், அப்பகுதி புழுதி மண்டலமாக மாறி வருகிறது. இதனால், ஜன்னல்களை திறந்து வைக்க கூட முடிவதில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தார்ச்சாலை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராஜா, பட்டாபிராம்.