ADDED : நவ 10, 2026 10:39 AM
அ நிறம் | அளவு
படப்பை: படப்பை அருகே மகாண்யம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து, 46; தனியார் தொழிற்சாலை காவலாளி. இவருக்கு மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனர்.
இவர், நேற்று முன்தினம் மதுவில் பூச்சி மருந்தை கலந்து குடித்து, மயங்கி விழுந்துள்ளார். உறவினர்கள் அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி மாரிமுத்து நேற்று இறந்தார். சோமங்கலம் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
