/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நீர் இறைக்கும் மோட்டார் திருடியவர் சிக்கினார்
/
நீர் இறைக்கும் மோட்டார் திருடியவர் சிக்கினார்
ADDED : ஆக 04, 2025 02:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்மஞ்சேரி:கட்டுமான பணித்தளத்தில், காப்பர் ஒயர், நீர் இறைக்கும் மோட்டார் ஆகியவற்றை திருடிய நபரை, போலீசார் கைது செய்தனர்.
சோழிங்கநல்லுார், பள்ளிக்கூடம் சாலையில், தனியார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி நடக்கிறது. இங்குள்ள காப்பர் ஒயர், நீர் இறைக்கும் மோட்டார் ஆகியவை, நேற்று முன்தினம் திருடு போயின.
செம்மஞ்சேரி போலீசார் விசாரணையில், செம்மஞ்சேரி, சுனாமி நகரை சேர்ந்த ஜனா, 20, என்பவர் திருடியது தெரிந்தது. நேற்று, அவரை கைது செய்த போலீசார், திருடிய பொருட்களை பறிமுதல் செய்தனர்.