/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏழு மண்டலங்களில் ஒரு நாள் குடிநீர் 'கட்'
/
ஏழு மண்டலங்களில் ஒரு நாள் குடிநீர் 'கட்'
ADDED : ஜன 26, 2025 02:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள பிரதான குழாயில், எலக்ட்ரானிக் மீட்டர் பொருத்தும் பணி நடக்க உள்ளது. இதனால், திருவெற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, திரு.வி.க. நகர், அம்பத்துார், அண்ணா நகர், மற்றும் ஆவடி மாநகராட்சி பகுதியில், 28ம் தேதி, குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும்.
பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக குடிநீரை சேமித்து வைக்க வேண்டும். அவசர குடிநீர் தேவைக்கு, https://cmwssb.tn.gov.in எந்த இணையத்தில் அல்லது 044- - 4567 4567 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, லாரி குடிநீர் பெற்று கொள்ளலாம் என, அதிகாரிகள் கூறினர்.

