/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குழாய் விரிசலால் வீணாகும் குடிநீர்
/
குழாய் விரிசலால் வீணாகும் குடிநீர்
ADDED : டிச 15, 2024 07:30 PM
சென்னை:திருமலைபிள்ளை சாலையில், குடிநீர் குழாயில் விரிசல் ஏற்பட்டு, சாலையில் குடிநீர் வீணாகிவருவது தொடர்பாக புகார் அளித்தும் குடிநீர் வாரியத்தினர் கண்டுக்கொள்ளவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட திருமலைப்பிள்ளை சாலையில், சில தினங்களாகவே குழாயில் விரிசல் ஏற்பட்டு, சாலையில் குடிநீர் வீணாக செல்கிறது. இதுகுறித்து, குடிநீர்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை என, அப்பகுதி மக்கள் புலம்புகின்றனர்.
இதுகுறித்து, பொதுமக்கள் கூறுகையில், 'சாலையில் ஊற்று போல் வெளியேறும் குடிநீர், அருகே உள்ள மழைநீர் வடிகாலில் சென்றுவிடுவதால், வாரியத்தினர் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். குடிநீர் சேமிப்பு குறித்து, மக்களுக்கு அறிவுரை கூறும் வாரியம், குடிநீர் வீணாவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

