/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மருத்துவ கல்லுாரியில் மாணவர்களுக்கு வரவேற்பு
/
மருத்துவ கல்லுாரியில் மாணவர்களுக்கு வரவேற்பு
ADDED : நவ 16, 2025 02:59 AM

சென்னை: ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லுாரியில் முதலாமாண்டு மருத்துவ மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
செங்குன்றம் அருகே நல்லுாரில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லுாரி உள்ளது. இக்கல்லுாரியில் நடப்பு ஆண்டு எம்.பி.பி.எஸ்., படிப்பில் நுாற்றுக்கணக்கான மாணவ - மாணவியர் சேர்ந்தனர். மாணவர்களின் கல்லுாரி முதல் நாள் வரவேற்பு விழா, அதன் வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
இந்நிகழ்ச்சியில் 250 எம்.பி.பி.எஸ்., மாணவர்களை வரவேற்று, பேராசிரியர்கள், டாக்டர்கள் பேசினர்; மாணவ - மாணவியரும் உற்சாகம் அடைந்தனர்.
இந்த நிகழ்வில், வேந்தர் ராமசந்திரன், இணை வேந்தர் ராதா ராமசந்திரன், நிர்வாக இயக்குநர் அட்சயா கம்லேஷ், மேலாண்மை இயக்குநர் ராஜீவ் கிருஷ்ணா, துணை வேந்தர் டாக்டர் நாராயணபாபு, பதிவாளர் டாக்டர் வெங்கடேஸ்வரன் மற்றும் முதல்வர் டாக்டர் ஆனந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நிர்வாக இயக்குநர் அட்சயா கம்லேஷ் உறுதிமொழி வாசிக்க, மாணவ - மாணவியர் அதையே திரும்ப கூறி உறுதிமொழி ஏற்றனர்.

