/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நாராயணபாட்டியை கொலை செய்தது யார்? 'தோற்ற மயக்கங்களோ' காமெடி த்ரில்லர்
/
நாராயணபாட்டியை கொலை செய்தது யார்? 'தோற்ற மயக்கங்களோ' காமெடி த்ரில்லர்
நாராயணபாட்டியை கொலை செய்தது யார்? 'தோற்ற மயக்கங்களோ' காமெடி த்ரில்லர்
நாராயணபாட்டியை கொலை செய்தது யார்? 'தோற்ற மயக்கங்களோ' காமெடி த்ரில்லர்
ADDED : ஜன 01, 2025 12:56 AM

'டம்மீஸ் ட்ராமா' வின், 'தோற்ற மயக்கங்களோ' நாடகம் நேற்று முன்தினம், கீழ்ப்பாக்கம், பவன்ஸ் பள்ளி அரங்கில், இலவசமாக காட்சிப்படுத்தப்பட்டது.
வேலையை விட்ட கணவன் சாமி, பிசினஸ் பிரசன்டேஷனுக்கு தயாராகிறார். பிரசன்டேஷனில் தோற்ற சாமி, பணம் இருந்தால் தான் தொழில் செய்ய முடியும் என்ற முடிவுக்கு வருகிறார். பணத்தை எப்படி தயார் செய்வது என, நாட்கணக்கில் யோசிக்கிறார்.
ஒருநாள், எதிர் வீட்டு நாராயணபாட்டி, சாமியிடம் உதவி கேட்கிறார். தன் வீட்டில் உள்ள ஒருவர், நாளை தன்னை கொலை செய்ய உள்ளதாகவும், அதை பார்த்தது போல் சாட்சி சொல்ல வேண்டும்; அதற்காக 50 லட்சம் கொடுப்பதாகவும், அதற்காக 5 லட்சம் முன்பணத்தை சாமியிடம் கொடுக்கிறார்.
தொழில் துவங்க காசுக்காக அலையும் சாமியும் பணத்தை வாங்குகிறார். மீதமுள்ள பணத்தை, தன் அறையில் இருந்து எடுத்து கொள்ளலாம் என பாட்டி சொல்கிறார்.
வேதனை படவேண்டிய காட்சிகளிலும், நகைச்சுவையை பரிமாறி அழகாக ஒவ்வொரு கட்டமும் கடந்தது. ஆனால், மனைவி உமா இதற்கு ஒப்புக் கொள்ளாததால், பணத்தை திரும்ப கொடுக்க சாமி பாட்டி வீட்டிற்கு செல்கிறார்.
அப்போது, படுக்கை அறையில் பாட்டி உயிரை விட பக்கத்தில் சாமி நின்று கொண்டிருந்தார். இந்த காட்சியை, பாட்டியின் மகன் ஆர்.கே., எனும் ராதாகிருஷ்ணன் பார்க்க, 'ஒருபுறம் கொலை செய்யப்பட்ட தாய், மறுபுறம் பணத்துடன் சாமி!'
'சாமிதான் பாட்டியை கொலை செய்தார்' என, போலீசிடம் பிடித்து கொடுக்கிறார். அப்படியானால், 'பாட்டியை யார் கொலை செய்திருப்பார்' என, ஆளாளுக்கு எழும் சந்தேக முடிச்சுகளுடன் காமெடி த்ரில்லர் படமாக ரசிகர்களுக்கு விருந்து படைத்தது.
போலீஸ் விசார ணையில், பண சிக்கலில் தவிக்கும் தன் குடும்பத்திற்கு 'இன்சூரன்ஸ்' பணம் கிடைப்பதற்காக, நாராயணபாட்டியே தற்கொலை செய்துக் கொண்டு, சாமியை சிக்க வைத்தது தெரிய வருகிறது.
அந்தவகையில், இறுதி வரை 'சஸ்பென்ஸ்' கொடுத்த 'தோற்ற மயக்கங்களோ' நாடகம் அரங்கின் கரகோஷத்தை பெற்றது.

