/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோயம்பேடு ரவுண்டானா பூங்காவை திறக்க முதல்வர் தேதி ஒதுக்குவாரா?
/
கோயம்பேடு ரவுண்டானா பூங்காவை திறக்க முதல்வர் தேதி ஒதுக்குவாரா?
கோயம்பேடு ரவுண்டானா பூங்காவை திறக்க முதல்வர் தேதி ஒதுக்குவாரா?
கோயம்பேடு ரவுண்டானா பூங்காவை திறக்க முதல்வர் தேதி ஒதுக்குவாரா?
ADDED : செப் 22, 2025 03:21 AM

கோயம்பேடு: கோயம்பேடு மேம்பால ரவுண்டானாவின் கீழ் பகுதியில், 8.63 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட பூங்கா பணி முடிந்தும், முதல்வர் தேதி ஒதுக்காததால், திறக்கப்படாமல் உள்ளது.
கோயம்பேடு மேம்பாலம் ரவுண்டானாவின் கீழ் பகுதியில், பிளாஸ்டிக், பழைய டயர்கள் மற்றும் கட்டட கழிவுகள் கொட்டப்பட்டு வந்தன. இவற்றை அகற்றி, ரவுண்டானாவை அழகுபடுத்த வேண்டும் என, நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து, கோயம்பேடு உள்வட்ட சாலை மற்றும் சென்னை - பூந்தமல்லி சாலை சந்திப்பு பகுதியில், 5 ஏக்கர் பரப்பளவில், 8.63 கோடி ரூபாயில், இயற்கை அழகுடன் கூடிய பசுமை பூங்காவை, சி.எம்.டி.ஏ., அமைத்துள்ளது.
மரங்கள் மற்றும் செடிகள், நடைபாதை மற்றும் இருக்கைகள், 50 பேர் அமரக்கூடிய அரங்கம், சிறுவர்கள் விளையாட்டு திடல், உடற்பயிற்சி கூடம், வாகனங்கள் நிறுத்தம் மற்றும் செயற்கை நீரூற்று உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.
அனைத்து பணிகள் முடிந்து சில மாதங்கள் ஆகியும், இன்னும் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் உள்ளது. முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க, அவரது தேதிக்காக பூங்கா திறப்பு தள்ளிப்போவதாக, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.