/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரயில்வே குட்டைகளுக்கு வேலி அமைக்கப்படுமா?
/
ரயில்வே குட்டைகளுக்கு வேலி அமைக்கப்படுமா?
ADDED : ஜன 27, 2025 03:48 AM
திருவொற்றியூர்:திருவொற்றியூர் மண்டலத்தில், அண்ணாமலை நகர், அம்பேத்கர் நகர், பூம்புகார் நகர், எர்ணாவூர் - முருகன் கோவில் சந்திப்பு, பர்மா நகர் போன்ற இடங்களில், ரயில்வே தண்டவாளங்களை ஒட்டி குட்டை உள்ளது.
இந்த குட்டையில் மழை காலத்தில் தேங்கும் மழைநீரால், பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வில் இருக்கும்.
தவிர, பிற பகுதிகளில் இருந்து, இரை தேடி வரும் பறவைகளால், இந்த ரயில்வே குட்டைகளை, துார்வாரி அழகுபடுத்தும் பணியில், மாநகராட்சி களமிறங்கியுள்ளது.
கரைகள் உயர்த்தப்படும் ரயில்வே குட்டைகளில், எதிர்பாராத விதமாக தவறி விழுபவர்கள் நீரில் மூழ்கி உயிரிழக்க நேரிடுகிறது.
இரு மாதங்களுக்கு முன், திருவொற்றியூர், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பாட்ஷா, 41, என்பவர், துாக்க கலக்கத்தில், வீட்டருகேயுள்ள ரயில்வே குட்டையில் தவறி விழுந்து பலியானார்.
அதே போல், சமீபத்தில் எர்ணாவூர் - முருகன் கோவில் சந்திப்பில் உள்ள, ரயில்வே குட்டையில், பொன்னாங்கண்ணி கீரை பறிக்க இறங்கிய, சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த காயத்ரி, 40, என்பவர், நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
தொடரும் உயிரிழப்புகளை தடுக்க ரயில்வே குட்டையின் சுற்றுப்புறத்தில், இரும்பு வேலிகள் அமைக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்து உள்ளது.

