/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பயன்பாடில்லாத மின் கம்பங்கள் அகற்றப்படுமா?
/
பயன்பாடில்லாத மின் கம்பங்கள் அகற்றப்படுமா?
ADDED : ஆக 13, 2024 12:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பயன்பாடில்லாத மின் கம்பங்கள் அகற்றப்படுமா?
அடையாறு மண்டலம், 177வது வார்டு, வேளச்சேரி, வி.ஜி.பி., செல்வா நகரில் சில ஆண்டுகளுக்கு முன், புதை மின் வடம் பதிக்கப்பட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டது.
இதையடுத்து, உயர் அழுத்த மின் கம்பியை கம்பத்துடன் அகற்ற வேண்டும். ஆனால், 4வது தெரு விரிவில் உள்ள மூன்று கம்பங்களில், மின் இணைப்பு இல்லாமல் வெறும் கம்பிகள் உள்ளன.
மிகவும் குறுகலான தெருவாக உள்ளதால், இந்த கம்பங்கள் தெருவுக்கு நெருக்கடியை ஏற்படுத்துகிறது. மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. உயர் அதிகாரிகள் தலையிட்டு, தேவையில்லாத கம்பத்தை அகற்ற வேண்டும்.
- பகுதிமக்கள்,
வி.ஜி.பி., செல்வா நகர், வேளச்சேரி.

