/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மூதாட்டியை தாக்கி நகை பணம் திருடிய பெண் கைது
/
மூதாட்டியை தாக்கி நகை பணம் திருடிய பெண் கைது
ADDED : செப் 15, 2025 01:00 AM

கும்மிடிப்பூண்டி; வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி நகை, பணம் திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.
கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி, 87. கடந்த 11ம் தேதி மதியம், இவரது வீட்டில் புகுந்த மர்ம நபர், மூதாட்டியை தாக்கி, பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்றார்.
பலத்த காயமடைந்த மூதாட்டி, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசாரின் விசாரணையில், மூதாட்டிக்கு பழக்கமான அதே பகுதியைச் சேர்ந்த சுப்ரியா , 20, என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
விசாரணையில், 'சம்பவத்தன்று மூதாட்டியிடம் சுப்ரியா கடன் கேட்டுள்ளார். மூதாட்டி மறுக்கவே, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சுப்ரியா தள்ளிவிடவே, கீழே விழுந்த மூதாட்டிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
அப்போது, பீரோவில் இருந்த 1.80 லட்சம் ரூபாய் மற்றும் 20 சவரன் நகைகளை, சுப்ரியா திருடிச் சென்றது தெரிய வந்தது. நேற்று அவரை கைது செய்த போலீசார், புழல் சிறையில் அடைத்தனர்.