/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மகளிர் கிரிக்கெட் துவக்கம்: 12 அணிகள் பலப்பரீட்சை
/
மகளிர் கிரிக்கெட் துவக்கம்: 12 அணிகள் பலப்பரீட்சை
ADDED : ஆக 04, 2025 03:11 AM

சென்னை:எஸ்.ஆர்.எம்., பல்கலையில் துவங்கிய, பெண்களுக்கான கிரிக்கெட் போட்டியில், பல்வேறு இடங்களில் இருந்து, 12 கல்லுாரி அணிகள் பங்கேற்றுள்ளன.
எஸ்.ஆர்.எம்., பல்கலை யின் நிறுவனர் பிறந்தநாளை முன்னிட்டு, பெண்களுக்கான கிரிக்கெட் போட்டி, செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங் கொளத்துாரில் உள்ள பல்கலை வளாகத்தில், நேற்று காலை துவங்கியது.
போட்டியில், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, மொத்தம் 12 மகளிர் கல்லுாரி அணிகள் பங்கேற்றுள்ன. நாக் அவுட் முறையில் போட்டிகள் நடக்கின்றன.
நேற்று காலை துவங்கிய, எஸ்.ஆர்.எம்., பல்கலை மற்றும் டபிள்யூ.சி.சி., அணிகளுக்கான முதல் போட்டியை, பல்கலையின் மாணவர்கள் இயக்குநர் நிஷா, டாஸ் போட்டு துவக்கி வைத்தார்.
'டாஸ்' வென்ற எஸ்.ஆர்.எம்., அணி, முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து, 15 ஓவர்களை முழுமையாக பயன் படுத்தி, நான்கு விக்கெட்டுகளை இழந்து, 162 ரன்கள் குவித்தது. அணிக்காக சுபஹாரணி 42 ரன்களும், ருத்ரா பிரியா 22 ரன்களும் எடுத்து சிறப்பான ஆட் டத்தை வெளிப்படுத்தினர்.
அடுத்ததாக இறங்கிய டபிள்யூ.சி.சி., அணி, 15 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகள் இழந்து, வெறும் 31 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், எஸ்.ஆர்.எம்., அணி, 13௧ ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. போட்டிகள், தொடர்ந்து 6ம் தேதி வரை நடக்கின்றன.