ADDED : ஆக 25, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவையை சேர்ந்த, 31 வயது பெண், திருமங்கலத்தில் உள்ள தனியார் அகாடமியில், யு.பி.எஸ்.சி., தேர்வுக்கு படித்து வருகிறார். அவருடன் படித்து வரும், திருச்சியை சேர்ந்த நாகசுந்தரம், 32 என்பவர், சில மாதங்களாகவே அவரை பின் தொடர்ந்து சென்றும், மொபைல் போன் வழியாகவும், காதலிக்கும்படி தொல்லை கொடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில், திருமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து, நாகசுந்தரத்தை நேற்று கைது செய்தனர்.