/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாலிபரை கல்லால் தாக்கி மொபைல் போன் பறிப்பு
/
வாலிபரை கல்லால் தாக்கி மொபைல் போன் பறிப்பு
ADDED : நவ 18, 2025 04:41 AM
பல்லாவரம்: கட லுார், குளக்குடியை சேர்ந்தவர் சூரியமூர்த் தி, 25. பல்லாவரத்தில் தங்கி, திருமுடிவாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் பணி முடிந்து, பல்லாவரம் ஈஸ்வரி நகர் சுரங்கப்பாதை அருகே ந டந்து சென்றார். அப்போது, அடையாளம் தெரியாத மூன்று பேர் வழிமறித்து, எந்த ஊர் என்று கேட்டு, கல்லால் அடித்து, சூரியமூர்த்தியின் மொபைல் போனை பறித்து சென்றனர்.
இதில், இடதுபக்க தலையில் காயமடைந்த அவர், தாம்பரத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனை க்கு சென்றார். அங்கு சிகிச்சை பெற்று, பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இப்புகாரின்படி போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

