/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நண்பரை கொலை செய்த வழக்கு வாலிபருக்கு ஆயுள் தண்டனை
/
நண்பரை கொலை செய்த வழக்கு வாலிபருக்கு ஆயுள் தண்டனை
ADDED : அக் 15, 2025 02:09 AM

ஆவடி, மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், நண்பரை கொலை செய்த வாலிபருக்கு, ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம், தீர்ப்பு வழங்கியது.
அய்யப்பன்தாங்கல், ஸ்ரீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் ருத்திரன், 24; தனியார் நிறுவன ஊழியர். இவர், கடந்த 2021ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, நண்பர்களான மணிகண்டன், 28, சிவபாண்டியன், 25, ஆகியோருடன் வீட்டில் மது அருந்தியுள்ளார்.
அப்போது, ருத்திரன் மற்றும் மணிகண்டன் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த மணிகண்டன், கத்தியால் ருத்திரனின் மார்பில் குத்தியதில், அவர் மயங்கி விழுந்துள்ளார்.
சிவபாண்டியன், அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு மருத்துவ பரிசோதனையில் அவர் இறந்தது தெரிந்தது.
இது குறித்து விசாரித்த மாங்காடு போலீசார், மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை, காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்து, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில், மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 2,000 ரூபாய் அபராதம் விதித்து, நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.