/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரயிலில் கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது
/
ரயிலில் கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது
ADDED : அக் 26, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ரயிலில் கஞ்சா கடத்தி வந்த ஒடிஷா வாலிபர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே, பெரியமேடு போலீசார் நேற்று முன்தினம் இரவு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அங்கு, சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த மூவரின் உடைமைகளை சோதனை செய்தபோது, 12 கிலோ கஞ்சா சிக்கியது.
விசாரணையில், ஒடிஷாவைச் சேர்ந்த அர்ஷாத், 36, உமர்பரூக், 32, சமீர், 33 என்பதும், ஒடிஷாவிலிருந்து ரயிலில் கஞ்சா கடத்தி வந்து, கேரளாவில் விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்ததும் தெரிய வந்தது. மூவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

