sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அரசு பஸ்களில் கூரியர் சர்வீஸ் துவக்க முடிவு :நஷ்டத்தை ஈடுகட்ட புது முயற்சி

/

அரசு பஸ்களில் கூரியர் சர்வீஸ் துவக்க முடிவு :நஷ்டத்தை ஈடுகட்ட புது முயற்சி

அரசு பஸ்களில் கூரியர் சர்வீஸ் துவக்க முடிவு :நஷ்டத்தை ஈடுகட்ட புது முயற்சி

அரசு பஸ்களில் கூரியர் சர்வீஸ் துவக்க முடிவு :நஷ்டத்தை ஈடுகட்ட புது முயற்சி


ADDED : ஜூலை 14, 2011 09:10 PM

Google News

ADDED : ஜூலை 14, 2011 09:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : பஸ்சில் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட புதிய கூரியர் பார்சல் சர்வீசை துவக்க அரசு போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.

கோவையில் சோதனை கட்டமாக 100 வழித்தடங்களில் இவற்றை அறிமுகம் செய்ய உள் ளது. இந்த சர்வீசில் பங்கேற்க டெண்டர் முறையையும் கையாள உள்ளது.பஸ் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்ற அரசின் கொள்கை முடிவால், அரசு போக்குவரத்துக் கழகம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இருப்பினும் அவ்வப்போது, சொகுசு பஸ், எக்ஸ்பிரஸ் பஸ், இடைநில்லா பஸ் என பல்வேறு வகைப்படுத்தி, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றன. டீசல், உதிரிபாக விலை உயர்வை கருத்தில் கொண்டு, பஸ் கட்டணத்தை சிறிய அள வில் உயர்த்தினாலும் தவறு இல்லை என மக்கள் எண்ணத்தில் இருந்தாலும், பதவியேற்றுள்ள அ.தி. மு.க., அரசு மக்களை பாதிக்கும் எந்த முடிவையும் மேற்கொள்ள கூடாது என்ற உறுதியுடன் உள்ளது. எனவே, வேறு வகையில் வருமானம் பெற யோசிக்க வைத்துள்ளது. கோவை நகரில் உள்ள சொகுசு பஸ்களில் பயணம் செய்ய பெரும்பாலான பயணிகள் விரும்புவதில்லை. கட்டணம் இருமடங்கு இருப்பதே இதற்கு காரணம். சற்று குறைவாக இருந்தாலும் கூட பயணிகள் கூட்டம் அதிகரிக்கும். ஆனால், சாதாரண கட்டண பஸ்சை விட இருமடங்காக இருப்பதால், அதிக அளவில் பயணிகள் செல்வதில்லை.எனவே, பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டு நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்துக் கழகத்துக்கு புத்துயிர் ஊட்ட புது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவையிலிருந்து நகர்களுக்கு இடையே ஓடும் அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில் கூரியர் சர்வீஸ் துவங்க அரசு போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக, நெடுந்தூரம் செல்லும் பஸ்களில் இந்த கூரியர் சர்வீஸ் இடம் பெற உள்ளது. இதற்கான டெண்டர் இம்மாதம் 29ம் தேதி திறக்கப்பட உள்ளது. கோவையிலிருந்து மதுரை, ஈரோடு, சேலம், சென்னை, சத்தியமங்கலம், ஊட்டி போன்ற வழித்தடங்களில் இயங்கும் நெடுந்தூர பஸ்களில் கூரியர் சர்வீஸ் துவக்கப்பட உள்ளது. இந்த பஸ்களில் கூரியர் அனுப்ப, டெண்டர் முறையில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த கூரியர் சர்வீஸ் ஒரு நகரத்திலிருந்து, மற்றொரு நகருக்கு பார்சல்களை கொண்டு செல்வது மட்டுமே பணி. கோவை பஸ் ஸ்டாண்டிலிருந்து மதுரை பஸ் ஸ்டாண்ட் வரை மட்டுமே இந்த பஸ்கள் பார்சலை எடுத்துச் செல்லும். டெண்டர் எடுக்கும் நிறுவனங்கள், இவற்றை பெற்று வினியோகம் செய்ய வேண்டும். குறிப்பிட்ட பஸ்சிலிருந்து பார்சலை அனுப்பவும், பெறவும் இவை அனுமதிக்கப்படும். அரசு போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறுகையில்,'டெண்டர் முறையில் திறக்கப்படும் இந்த பார்சல் சர்வீஸ் முதல் கட்டமாக 100 வழித்தடங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பின்னர் தேவையை பொறுத்து விரிவுபடுத்தப்படும். போக்குவரத்துக் கழகத்துக்கு ஏற்பட்டு வரும் நஷ்டத்தை சரிகட்டவும், கூடுதல் செலவை சமாளிக்கவும் இந்த முறையை அரசு திட்டமிட்டுள்ளது. அரசுக்கு கூடுதல் வருவாய் ஈட்ட இந்த முறை கையாளப்படுகிறது' என்றார்.






      Dinamalar
      Follow us