sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 14, 2026 ,மாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இன்ஜினியரிங் படிப்புக்கு ஏங்கும் ஏழை மாணவி

/

இன்ஜினியரிங் படிப்புக்கு ஏங்கும் ஏழை மாணவி

இன்ஜினியரிங் படிப்புக்கு ஏங்கும் ஏழை மாணவி

இன்ஜினியரிங் படிப்புக்கு ஏங்கும் ஏழை மாணவி


ADDED : ஜூலை 17, 2011 01:11 AM

Google News

ADDED : ஜூலை 17, 2011 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி : பொறியியல் கல்லூரியில் படிக்க, கவுன்சிலிங் மூலம் வாய்ப்பு கிடைத்தும், பண வசதியில்லாததால், பனியன் கம்பெனி தொழிலாளியின் மகளுக்கு படிப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள கணபதிபாளையத்தை சேர்ந்தவர் ராஜலிங்கம்; திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் பணிபுரிகிறார். மகள் உமாமகேஸ்வரி, பிளஸ் 2 பொதுத் தேர்வில் 1,104 மதிப்பெண் பெற்றுள்ளார். பொறியியலில், கட்-ஆப் 191 பெற்ற இவருக்கு, கவுன்சிலிங்கில் பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் பிரிவு கிடைத்துள்ளது. கல்லூரிக்கு செலுத்த வேண்டிய பணத்தை திரட்ட முடியாததால், மாணவியின் பொறியியல் படிப்பு கேள்விக்குறியாகி வருகிறது. இந்நிலையில், பண உதவி கேட்டு பெற்றோருடன் உமாமகேஸ்வரி அல்லாடிக் கொண்டிருக்கிறார்.



மாணவி உமாமகேஸ்வரி கூறுகையில்,''நன்றாக படிப்பு வந்தாலும், பண வசதியில்லாததால் படிப்பை தொடர முடியவில்லை. பள்ளி விடுமுறை நாட்களில் பனியன் கம்பெனிக்கு தினக்கூலி வேலைக்கு சென்றேன். அதன் மூலம் கிடைத்த வருவாய் மேல்படிப்புக்கு உதவியாக இருந்தது. பிளஸ் 2 விடுமுறையில் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் வேலைக்கு செல்ல முடியவில்லை. பொறியியல் கல்லூரிக்கு பணம் கட்ட முடியாததால், படிப்பை தொடர முடியாமல் போய்விடுமோ என்று பயமாக உள்ளது. எனது படிப்புக்கு உதவித்தொகை கொடுத்தால், பொறியியல் படிப்பை தொடர முடியும்'' என்றார். மாணவியின் பெற்றோரை 99423 51225, என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.










      Dinamalar
      Follow us