sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பொள்ளாச்சி மாற்றுத்திறனாளிகள் முதல்வருக்கு தந்தி

/

பொள்ளாச்சி மாற்றுத்திறனாளிகள் முதல்வருக்கு தந்தி

பொள்ளாச்சி மாற்றுத்திறனாளிகள் முதல்வருக்கு தந்தி

பொள்ளாச்சி மாற்றுத்திறனாளிகள் முதல்வருக்கு தந்தி


ADDED : ஜூலை 14, 2011 09:33 PM

Google News

ADDED : ஜூலை 14, 2011 09:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி : பொள்ளாச்சி திறமை மாற்றுதிறானாளிகள் வழிகாட்டி மையம் சார்பில் முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன்சிங், டில்லியில் மாற்று திறனாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள முதன்மை ஆணையர் ஆகியோருக்கு தந்திகள் அனுப்பப்பட்டுள்ளன.

திறமை மாற்றுதிறனாளிகள் வழிகாட்டி மைய ஒருங்கிணைப்பாளர் காமராஜ் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 1,653 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. கடந்த 1995ம் ஆண்டு ஊனமுற்றோர் சட்டத்தின்படி மூன்று சதவீதம் (51 இடங்கள்) மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும். இதன்படி தகுதி உள்ள 66 மாற்றுத்திறனாளிகள் கொண்ட பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 51 சீட்கள் மாற்றுதிறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள். ஆனால், 46 இடங்கள் மட்டுமே மாற்றுதிறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஐந்து இடங்கள் சட்ட விரோதமாக மாற்றுதிறனாளிகள் அல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த வானதி என்ற மாணவி மருத்துவ படிப்புக்கான 'சீட்' கிடைக்கவில்லை என கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த பெண்ணுக்கு மருத்துவ படிப்புக்கான தகுதிகள் அனைத்து இருந்தும் இடம் ஓதுக்கப்படவில்லை. அதனால், அவருக்கு 'சீட்' கிடைக்க கோரியும், பட்டியலில் உள்ள மற்ற ஐந்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் அமைப்பின் சார்பில் மூன்று 'தந்திகள்' அனுப்பப்பட்டுள்ளன. இதற்கு கண்டிப்பாக ஒரு தீர்வு கிடைக்க வேண்டும். மாற்றுதிறனாளிகளின் திறமைக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றார். இம்மையத்தின் பொறுப்பாளர் முஜிப்பீர் ரகுமான் மற்றும் உறுப்பினர்கள் உட்பட 15க்கும் மேற்பட்ட மாற்றுதிறனாளிகள் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்துக்கு சென்றனர்.






      Dinamalar
      Follow us