/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோடை விடுமுறைக்கு பிறகு கோர்ட்கள் திறப்பு
/
கோடை விடுமுறைக்கு பிறகு கோர்ட்கள் திறப்பு
ADDED : ஜூன் 04, 2024 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;ஒரு மாத கோடை விடுமுறைக்கு பிறகு, அனைத்து கோர்ட்களும் செயல்பட துவங்கின.
கோடை காலத்தை முன்னிட்டு, மே 1 முதல் 31 வரை, கோர்ட்களுக்கு கோடை விடுமுறை அளித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. கோவை மாவட்ட முதன்மை செஷன்ஸ், கூடுதல் செஷன்ஸ் கோர்ட்கள், ஐந்து சார்பு நீதிமன்றங்கள் மற்றும் ஐந்து முன்சிப் கோர்ட்களில், கடந்த ஒரு மாதமாக விசாரணை நடைபெறவில்லை.
சி.ஜே.எம்., கோர்ட், மாஜிஸ்திரேட் கோர்ட்கள், சிறப்பு கோர்ட்கள், விரைவு கோர்ட்கள் மட்டும் செயல்பட்டன. இந்நிலையில், ஒரு மாத கோடை விடுமுறை முடிந்து, கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து கோர்ட்கள், நேற்று வழக்கம் போல செயல்பட்டன.