/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இமயமலையில் 10 நாள் சிறப்பு பயிற்சி
/
இமயமலையில் 10 நாள் சிறப்பு பயிற்சி
ADDED : ஜூலை 25, 2011 09:26 PM
கோவை : பாரதியார் பல்கலை உடற்கல்வித்துறை சார்பில், 'அட்வென்ட்சர் வாட்டர் ஸ்போர்ட்ஸ் - டிரெக்கிங் கேம்ப்' என்ற தலைப்பில் பல்கலை மாணவ,மாணவியர் இமயமலைக்கு 10 நாட்கள் சிறப்பு பயிற்சியாக சென்று திரும்பினர்.
பாரதியார் பல்கலை உடற்கல்வித்துறை சார்பில் ஆசிரியர் குமரேசன் தலைமையில் 60 மாணவர்களும், 30 மாணவியரும் இமயமலையிலுள்ள போஸ்டாம் என்ற இடத்திற்கு சென்று மலையேற்ற பயிற்சி பெற்றனர்.
பயிற்சி முகாமில், 3,000 மீட்டர் உயரம் வரை மலையேற்றத்திலும், 'காயா கிங்' எனப்படும் நீர் விளையாட்டிலும், 'ரோயிங்' எனப்படும் படகு ஓட்டுதலிலும், 'வாட்டர் சர்பிங்' எனப்படும் நீர் சறுக்கு விளையாட்டிலும், காற்றினால் செல்லும் ஓடம் ஓட்டும் பயிற்சியிலும் பயிற்சி பெற்று திரும்பினர்.