/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'உள்ளே' இருந்தாலும் நுாறு சதவீதம் தேர்ச்சி
/
'உள்ளே' இருந்தாலும் நுாறு சதவீதம் தேர்ச்சி
ADDED : மே 12, 2024 10:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
- நமது நிருபர் -
கோவை மத்திய சிறையில், 50 ஆண்கள் மற்றும், 4 பெண்கள் என, 54 கைதிகள்,பத்தாம் வகுப்பு தேர்வை எழுதினர். தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.
அதில்,மணிகண்டன், 379 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும், கவுதம், 359 பெற்று இரண்டாவது இடத்தையும், ஜார்ஜ் அசோக்குமார், 358 பெற்று மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.
இவர்கள் அனைவரையும் சிறை எஸ்.பி., செந்தில்குமார் பாராட்டினார். கடந்த6ம் தேதிவெளியான பிளஸ் 2 தேர்விலும்,கைதிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
கடந்த ஆண்டும் பத்தாம் வகுப்பு தேர்வில், கோவை மத்திய சிறை கைதிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.