/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு கல்லுாரிகளில் 28ம் தேதி முதல் கலந்தாய்வு; 1.10 லட்சம் பேர் விண்ணப்பம் சமர்ப்பிப்பு

ADDED : மே 16, 2024 04:37 AM
கோவை, : அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் மாணவர்கள் சேர்க்கை விண்ணப்ப பதிவு நடந்துவரும் நிலையில், இதுவரை 1.10 லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியானது முதல் அரசு கலை அறிவியல் கல்லுாரிகளுக்கான விண்ணப்ப பதிவு துவங்கியது. தமிழகத்தில், 164 அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில், 140 பாடப்பிரிவுகளுக்கு மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளனர்.
எதிர்வரும், 20ம் தேதியுடன் விண்ணப்ப பதிவு நிறைவு பெறவுள்ளன; தரவரிசை பட்டியல் அந்தந்த கல்லுாரிகளுக்கு மே 24ம் தேதி வெளியிடப்படவுள்ளது.
இதுகுறித்து, அரசு கலை கல்லுாரி சேர்க்கை ஒருங்கிணைப்பாளர் ஒருவர் கூறியதாவது: வரும் 20ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும். இதுவரை, 1.10 லட்சம் பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.
இம்மாணவர்களுக்கு, 24ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். வரும் 28 முதல் 30ம் தேதி வரை சிறப்பு ஒதுக்கீட்டினருக்கான கலந்தாய்வும், ஜூன் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை முதல் கட்ட பொது கலந்தாய்வும் நடைபெறும். ஜூலை, 3ம் தேதி முதலாமாண்டு வகுப்புகள் துவக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.