/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விற்பனைக்கு வைத்திருந்த 120 கிராம் கஞ்சா பறிமுதல்
/
விற்பனைக்கு வைத்திருந்த 120 கிராம் கஞ்சா பறிமுதல்
ADDED : ஜூலை 01, 2024 11:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:உடையாம்பாளையம் பகுதியில், 120 கிராம் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
உடையாம்பாளையம், அண்ணமார் கோவில் வீதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக பீளமேடு போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த போலீசார், தேனி மாவட்டம், உத்தமபாளையம், கருமாரிபுரத்தை சேர்ந்த ஜெகதீஸ்வரன்,28, என்பவரை பிடித்து விசாரித்தனர். அவரை சோதனை செய்தபோது, சட்டவிரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த, 120 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.