ADDED : மே 31, 2024 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டாமுத்துார்;பேரூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட சுண்டக்காமுத்தூரில், வெளிமாநிலங்களில் இருந்து சட்ட விரோதமாக குட்கா பொருட்கள் கொண்டு வரப்பட்டு, கடைகளுக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சுண்டக்காமுத்துார் ஐயப்பன் கோவில் எதிரே உள்ள எலக்ட்ரிக்கல் கடையில் சோதனை செய்தனர். சோதனையில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து சட்ட விரோதமாக குட்கா பொருளை பதிக்கி வைத்திருந்த சுண்டக்காமுத்தூரை சேர்ந்த ஜூகர்மல்,42 என்பவரை பேரூர் போலீ சார் கைது செய்தனர்.
அவரிடமிருந்து, 132.8 கிலோ எடையுள்ள குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.