/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சோதனை ஓட்டம் துவங்கி 18 மாசம் ஆச்சுஒரு சொட்டு தண்ணீர் கூட வரலே நீரேற்று நிலையத்தில் விவசாயிகள் புகார்

ADDED : செப் 03, 2024 01:50 AM
அன்னுார்;'அக்கரை செங்கப்பள்ளி ஊராட்சியில், ஏழு குட்டைகளுக்கும், இதுவரை ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை,' என உதவி பொறியாளர்களிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
அக்கரை செங்கப்பள்ளி விவசாயிகள், நேற்று அன்னுார் அருகே குன்னத்தூராம் பாளையத்தில் உள்ள அத்திக்கடவு திட்ட ஆறாவது நீரேற்று நிலைய அதிகாரிகளிடம் கூறியதாவது:
எங்கள் ஊராட்சி விவசாயத்தை நம்பி உள்ளது.
அங்குள்ள ஏழு குட்டைகள் அத்திக்கடவு திட்டத்தில் சேர்க்கப்பட்டு, பிரதான குழாய், கிளைக் குழாய்கள் பதிக்கப்பட்டு, ஓ.எம்.எஸ்., கருவி பொருத்தப்பட்டுள்ளது. கடந்த 2023 பிப்ரவரியில் அத்திக்கடவு திட்ட சோதனை ஓட்டம் துவங்கியது.
அன்னுார், கரியாம்பாளையம், காரே கவுண்டம்பாளையம், கஞ்சப்பள்ளி ஊராட்சிகளில் உள்ள குளம், குட்டைகளுக்கு தண்ணீர் விடப்பட்டது. ஆனால் எங்கள் ஊராட்சியில் உள்ள 27 ஏக்கர் பரப்பளவு வையாளிபாளையம் குட்டை, ஐந்து ஏக்கர் தொட்டிபாளையம் குட்டை, தலா மூன்று ஏக்கருள்ள வாக்கனாங் கொம்பு, நகமரத்தான் குட்டைகள், தலா இரண்டு ஏக்கர் உள்ள காரனுார் மற்றும் ராமே கவுண்டன்புதூர் குட்டை என ஏழு குட்டைகளிலும் இதுவரை சோதனை ஓட்டம் நடத்தப்படவில்லை.
ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை.
தற்போது பவானி ஆற்றில் அதிகளவு நீர் வருகிறது. தற்போது உபரி நீர் வரத்து உள்ளதால், உடனடியாக எங்கள் ஊராட்சியில் உள்ள குட்டைகளுக்கு தண்ணீர் விட வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தனர். 'உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, உதவி பொறியாளர்கள், விவசாயிகளிடம் தெரிவித்தனர்.