/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜெபக்கூடத்தில் சாப்பிட்ட 2 பேர் பலி
/
ஜெபக்கூடத்தில் சாப்பிட்ட 2 பேர் பலி
ADDED : ஏப் 16, 2024 10:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆனைமலை:கோவை மாவட்டம், ஆனைமலை தெற்கு தெருவில் உள்ள ஜெபக்கூடத்தில், கடந்த, 14ம் தேதி பங்கேற்றவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
அந்த உணவை உட்கொண்ட சிறிது நேரத்தில் சிலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது; எட்டு பேர் பாதிக்கப்பட்டனர். அதில், ஆனைமலையைச் சேர்ந்த சிவகாமி, 70, என்பவர் இறந்தார்.
மேலும், அதே ஊரைச் சேர்ந்த ராஜேஸ்வரி, 48, கோவை அரசு மருத்துவமனையில் இறந்தார். மற்ற ஆறு பேர் பொள்ளாச்சி, கோவை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.
இதையடுத்து, ஜெபக் கூடத்துக்கு, வருவாய் துறையினர் 'சீல்' வைத்தனர்.

