/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிருஷ்ணா கல்லுாரியின் 20வது பட்டமளிப்பு விழா
/
கிருஷ்ணா கல்லுாரியின் 20வது பட்டமளிப்பு விழா
ADDED : ஏப் 29, 2024 01:54 AM

போத்தனூர்;கிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியின், 20வது பட்டமளிப்பு விழா நடந்தது.
குனியமுத்தூர் அடுத்து சுகுணாபுரத்தில், கல்லூரி வளாகத்திலுள்ள கிருஷ்ணா அரங்கில் பட்டமளிப்பு விழா நடந்தது. பெர்ஷிங் இந்தியா நிறுவன தலைவர் பாலசுப்ரமணியன் பேசுகையில், கல்லூரி கல்வி பயில வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த பெற்றோரை மதிக்க வேண்டும். கற்றலை வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும். எண்ணங்கள், செயல்கள் நேர்மறையாக இருக்க வேண்டும். சமுதாய முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு பாடுபட வேண்டும், என்றார்.
தொடர்ந்து, தரவரிசையில் இடம்பிடித்த மாணவர்களுக்கு அவர், பட்ட சான்றிதழை வழங்கினார். முன்னதாக கல்லூரி முதல்வர் ஜெகஜீவன் ஆண்டறிக்கை வாசித்தார். கிருஷ்ணா கல்வி குழும முதன்மை செயல் அலுவலர் சுந்தரராமன், பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.

