/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீதிமன்றங்களில் 2,329 பணியிடம்
/
நீதிமன்றங்களில் 2,329 பணியிடம்
ADDED : மே 22, 2024 01:15 AM
கோவை;நீதிமன்றங்களில் காலியாகவுள்ள, 2,329 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 27ம் தேதி கடைசி நாளாகும்.
தமிழ்நாடு முழுவதும், கோவை உட்பட அனைத்து மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களில், 2,329 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.
நகல் பரிசோதகர்,60, நகல் வாசிப்பாளர், 11, இளநிலை கட்டளை நிறைவேற்றுனர், 242, ஜெராக்ஸ் ஆபரேட்டர், 53, டிரைவர், 27, நகல் பிரிவு உதவியாளர், 17, அலுவலக உதவியாளர், 638, துாய்மை பணியாளர், 202, காவலர் மற்றும் இரவு காவலர், 459, இரவு காவலர் மற்றும் மசால்ஜி,85, மசால்ஜி,402, ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதற்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க, வரும் 27ம் தேதி கடைசி நாள். இது குறித்த முழு விவரம்,www.mhc.tn.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

