/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
270 கிலோ புகையிலை பொருள் பறிமுதல்
/
270 கிலோ புகையிலை பொருள் பறிமுதல்
ADDED : மே 26, 2024 12:16 AM

நெகமம்:நெகமம் அருகே வாகன சோதனையின் போது, விற்பனைக்காக கொண்டு சென்ற, 270 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நெகமம் - தாராபுரம் ரோடு, அனுப்பர்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே, போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக இருந்த கார் மற்றும் பைக்கை சோதனை செய்தனர். அதில், விற்பனைக்காக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
இதில் சம்பந்தப்பட்ட, பொள்ளாச்சி பனிக்கம்பட்டியை சேர்ந்த ஆல்வின், 30, கோட்டாம்பட்டியை சேர்ந்த இம்மானுவேல், 38, மாக்கினாம்பட்டியை சேர்ந்த பாலசுப்ரமணி, 47, கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த சர்புதீன், 38, மற்றும் இஸ்மாயில், 29, ஆகிய, 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து, 270 கிலோ புகையிலை பொருள், 1.99 லட்சம் ரூபாய் பணம், பைக் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நெகமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.