/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கணக்காளரிடம் ரூ.28 லட்சம் மோசடி
/
கணக்காளரிடம் ரூ.28 லட்சம் மோசடி
ADDED : ஜூன் 18, 2024 12:37 AM
கோவை;பங்கு சந்தையில் லாபம்ஆசை காட்டி, கணக்காளரிடம் ரூ.28 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக, மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கோவை, ராமநாத புரம், சுப்பையா லே-அவுட்டை சேர்ந்தவர் லோகேஷ், 24; இவர் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிகிறார். கடந்த ஏப்., 1ம் தேதி இவருக்கு வந்த 'வாட்ஸ் ஆப்' குறுஞ்செய்தியில், 'புதிய பங்கு சந்தையில் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்தும், வாங்கியும் நல்ல லாபம் ஈட்டலாம்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை நம்பி, ஏப்., 1 முதல் மே 22ம் தேதி வரை குறிப்பிடப்பட்ட வங்கி கணக்கில் ரூ. 28 லட்சத்து, 63 ஆயிரம் தொகையை, 10 தவணைகளாக லோகேஷ் செலுத்தியுள்ளார்.
ஆனால், அதற்கான வரவுகள் எதுவும் இதுவரை இல்லாததால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த லோகேஷ், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில், புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.