/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூன்று நாட்களில் 3 சுயே., மனுதாக்கல்
/
மூன்று நாட்களில் 3 சுயே., மனுதாக்கல்
ADDED : மார் 22, 2024 10:46 PM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில் போட்டியிட, கடந்த மூன்று நாட்களாக பொள்ளாச்சியில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. கோவையில் இதுவரை மூவர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. ஆவணங்களில்லாமல் பணம் மற்றும் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், பொள்ளாச்சி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் கடந்த, 20ம் தேதி மனு தாக்கல் துவங்கியது. கடந்த மூன்று நாட்களாக, காலை, 11:00 மணி முதல் மாலை, 3:00 மணி வரை அதிகாரிகள் காத்திருந்தாலும், பொள்ளாச்சியில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால், கோவையில் மூன்று நாட்களில், மொத்தம், மூன்று சுயேட்சைகள் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சைகள் என மொத்தம், 17 பேர் மனுக்கள் பெற்று சென்றுள்ளனர்.

