/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
460 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்
/
460 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்
ADDED : ஜூலை 24, 2024 11:48 PM
சூலுார் : சூலுார் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த, 460 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்துள்ளனர்.
சூலுார் அடுத்த பாப்பம்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, சூலுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அன்னை நகர் பகுதியில் வசிக்கும் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தை சேர்ந்த முருகராஜ்,47 வீட்டில், 460 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீசார், முருகராஜை கைது செய்தனர்.
அவருக்கு உடந்தையாக இருந்த, தூத்துக்குடி ஸ்ரீ வெங்கடேசபுரத்தை சேர்ந்த சிவசுப்பிரமணியம், 44, என்ற நபரையும் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.