/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு கல்லுாரியில் 6,737 விண்ணப்பங்கள் நாளை 30ம் தேதி கலந்தாய்வு துவக்கம்
/
அரசு கல்லுாரியில் 6,737 விண்ணப்பங்கள் நாளை 30ம் தேதி கலந்தாய்வு துவக்கம்
அரசு கல்லுாரியில் 6,737 விண்ணப்பங்கள் நாளை 30ம் தேதி கலந்தாய்வு துவக்கம்
அரசு கல்லுாரியில் 6,737 விண்ணப்பங்கள் நாளை 30ம் தேதி கலந்தாய்வு துவக்கம்
ADDED : மே 28, 2024 11:15 PM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் சேர, 6,737 விண்ணப்பங்கள், 'ஆன்லைன்' வாயிலாக பெறப்பட்டுள்ளன. மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை, 30ம் தேதி துவங்குகிறது.
பொள்ளாச்சி அரசு கலைக்கல்லுாரி முதல்வர் சுமதி வெளியிட்டுள்ள அறிக்கை:
கல்லுாரியில், பி.ஏ., (ஆங்கிலம்), பி.எஸ்சி., (கணிதம்), பி.காம்., (கணினி பயன்பாட்டியல்), பி.காம்., (சி.ஏ.,), பி.காம்., (தொழில்முறை கணக்கியல்), பி.காம்., (பி.ஏ.,) மற்றும் பி.பி.ஏ., ஆகிய பாடப்பிரிவுகளில், 300 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்காக, 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில், 6,737 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
முதற்கட்டமாக, சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான (அந்தமான், நிக்கோபார் மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள், தேசிய மாணவர் படை, முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், பாதுகாப்பு படைவீரர்கள், குழந்தைகள் மற்றும் விளையாட்டு தகுதி பெற்ற மாணவர்கள்) கலந்தாய்வு நாளை, 30ம் தேதி நடக்கிறது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் ஜூன் 10ம் தேதி நடக்கிறது.
பி.காம்., (கணினி பயன்பாடு), பி.காம்., (தொழில்முறை கணக்கியல்), பி.பி.ஏ., பாடப்பிரிவுகளுக்கும், ஜூன் 10ம் தேதியும், பி.எஸ்சி., கணிதம் பாடப்பிரிவுக்கு, 12ம் தேதியும்; பி.ஏ., ஆங்கிலம் பாடப்பிரிவுக்கு, 13ம் தேதியும் கலந்தாய்வு நடக்கிறது.
மாணவர்களின் தரவரிசை பட்டியல் மற்றும் சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள் பற்றிய விபரங்கள், http.www.gascpollachi.in என்ற இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.