/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேளாண் வளர்ச்சி திட்ட கிராமங்களில் 80 சதவீத மானியம்
/
வேளாண் வளர்ச்சி திட்ட கிராமங்களில் 80 சதவீத மானியம்
வேளாண் வளர்ச்சி திட்ட கிராமங்களில் 80 சதவீத மானியம்
வேளாண் வளர்ச்சி திட்ட கிராமங்களில் 80 சதவீத மானியம்
ADDED : ஆக 02, 2024 06:00 AM
கோவில்பாளையம்:
சர்க்கார் சாமக்குளம் வட்டாரம், வெள்ளானைப் பட்டியில், மண் வள மேலாண்மை மற்றும் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்ட விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
வேளாண் உதவி இயக்குனர் நாமத்துல்லா பேசுகையில், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமங்களில் 80 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்ய, விவசாயிகள் ஆதார் நகல், சாகுபடி அடங்கல், சிட்டா நகல், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். இ-சேவை மையம் அல்லது வட்டார வேளாண் மையத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
மக்காச்சோள பயிருக்கு ஏக்கருக்கு 722 ரூபாயும், சோள பயிருக்கு 245 ரூபாயும் பிரிமியம் செலுத்த வேண்டும். மக்காச்சோள பயிருக்கு செப்., 6ம் தேதியும், சோள பயிருக்கு செப்., 16ம் தேதியும் கடைசி நாள் ஆகும், என்றார்.
வேளாண் அலுவலர் திவ்யா பேசுகையில், மண் மாதிரிகள் எடுக்கும் போது கவனம் தேவை. மண் மாதிரி மற்றும் நீர் மாதிரிகளை எடுத்து பரிசோதிப்பதன் வாயிலாக தேவையான உரம் மட்டும் இடலாம், என்றார். வேளாண் அறிவியல் நிலையத்தின் துரைசாமி, மண்ணில் சத்துக்களை பாதுகாக்க கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து கூறினார்.