/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அடிக்கடி முறிந்து விழும் மரக்கிளை
/
அடிக்கடி முறிந்து விழும் மரக்கிளை
ADDED : மே 01, 2024 11:06 PM

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள விநாயகர் கோவிலின் மரக்கிளை உடைந்து விழுந்ததால் பாதிப்பு ஏற்பட்டது.
கிணத்துக்கடவு, பேரூராட்சி அலுவலகம் செல்லும் வழியில் ஆதிபட்டிவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் உள்ள அரச மரத்தின் கிளை நேற்று காலை திடீரென முறிந்து, கோவிலின் மேற்கூரை, குடியிருப்பு பகுதி அருகில் விழுந்தது. இதே போன்று, இங்கு கடந்த மாதம் மரத்தின் கிளை முறிந்து குடியிருப்புகளுக்குள் விழுந்தது. இதனால், அப்பகுதியில் இருந்த ஒரு வீட்டின் மின் இணைப்பு துண்டானது. மேலும், சாலையோர கடை சேதம் அடைந்தது.
எனவே, இப்பகுதி மக்கள் நலன் கருதி, குடியிருப்பு பகுதி வரை உள்ள இந்த மரத்தின் கிளையை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அகற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.

