/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஐவர் கால்பந்து போட்டியில் சிறுவர்கள் அபார ஆட்டம்
/
ஐவர் கால்பந்து போட்டியில் சிறுவர்கள் அபார ஆட்டம்
ADDED : மே 14, 2024 01:41 AM

கோவை;பேரூரில் நடந்த ஐவர் கால்பந்து போட்டியில், சிறுவர்கள் சிறப்பாக விளையாடி, கோப்பையை தட்டிச்சென்றனர்.
பிளையர் பீட் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில், சிறுவர்களுக்கான ஐவர் கால்பந்து போட்டி, பேரூர் 'தி கேம் ஜோன்' கால்பந்து டர்ப் மைதானத்தில் நடந்தது.
இதில் கோவை, நீலகிரி, பழநி, கேரளா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட அணிகள் நாக் அவுட் முறையில் போட்டியிட்டன. சிறுவர்களுக்கு 10 மற்றும் 12 வயது ஆகிய பிரிவுகளில், போட்டிகள் நடத்தப்பட்டன.
இதன் 10 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில், கேரளாவை சேர்ந்த ஆரஞ்ச் கால்பந்து பள்ளி அணி முதலிடம், கோவை மதுக்கரை கால்பந்து கிளப் அணி இரண்டாமிடம், ஊட்டி அக்வா ஸ்பைடர்ஸ் அணி மூன்றாமிடம் பிடித்தன.
12 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில், கேரளா ஆரஞ்ச் கால்பந்து பள்ளி முதலிடம், கோவை என்.எஸ்.எஸ்., அணி இரண்டாமிடம், கோவை எம்.எஸ்., கிளப் அணி மூன்றாமிடம் பிடித்தன.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பை, பதக்கம் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டன.

