/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குப்பை மலை நடுவே வீட்டினுள் வசிக்கும் தாய், மகளால் பரபரப்பு
/
குப்பை மலை நடுவே வீட்டினுள் வசிக்கும் தாய், மகளால் பரபரப்பு
குப்பை மலை நடுவே வீட்டினுள் வசிக்கும் தாய், மகளால் பரபரப்பு
குப்பை மலை நடுவே வீட்டினுள் வசிக்கும் தாய், மகளால் பரபரப்பு
ADDED : ஜூலை 21, 2024 12:11 AM

கோவை;ஐந்து ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்த தாய், மகள் வீட்டில் இருந்து கிலோ கணக்கில் குப்பையை, மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
கோவை ராம்நகர் பகுதியில் உள்ள ஒரு, அபார்ட்மென்டில், 63 வயதான தாய் மற்றும், 51 வயதான அவரது மகள் குடியிருந்து வருகின்றனர். இருவரும் வீட்டை விட்டு வெளியில் அதிகம் வருவதில்லை.
அருகில் உள்ள குடியிருப்புவாசிகளிடமும் பேசுவதில்லை. வீட்டு குப்பையை வெளியில் கொட்டுவதில்லை. இதனால் வீடு முழுவதும் குப்பை சேர்ந்து, துர்நாற்றம் வீசியது. தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டது.
சமூக ஆர்வலர்கள் சிலர், குடியிருப்போர் சங்க நிர்வாகிகளின் ஒத்துழைப்புடனும், மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் உதவியுடனும், நேற்று குப்பையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
காலை 8:00 மணி முதல் காலை, 11:30 மணி வரை கிலோ கணக்கில் குப்பை அகற்றப்பட்டது. வீட்டுக்குள் மீதமிருக்கும் குப்பையையும், வரும் நாட்களில் அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
மனநல மருத்துவர் கூறுவதென்ன
'ஏதோ காரணங்களால், தாயும் மகளும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உரிய சிகிச்சை அளித்தால் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும்' என்கின்றனர் மனநல மருத்துவர்கள்.
பிரபல மனநல மருத்துவர் மோனி கூறியதாவது:
இது, 'ஸ்கீசோபெர்னியா' எனப்படும் குறைபாடாக இருக்கலாம். மூளையில் 'டோப்பமின்' அதிகமாக சுரப்பதால் இக்குறைபாடு ஏற்படுகிறது. இவர்கள் சமூகத்தை விட்டு விலகி, தனிமையை நாடுகின்றனர். தங்கள் மீதும் அக்கறையின்றி உள்ளனர்.
உணவையும் முறையாக எடுப்பதில்லை. வித்தியாசமான, சமூகத்துக்கு ஒத்துவராத நடவடிக்கைகள், உணர்ச்சிகளை வெளிப்படுத்த தெரியாதது, கவனக்குறைவு, யாரையும் நம்புவதில்லை உள்ளிட்டவை, இப்பாதிப்பின் அறிகுறிகள். மருந்துகள், தெரபிகள், கவுன்சிலிங், மறுவாழ்வு பயிற்சிகள் வாயிலாக, இயல்பு நிலைக்கு கொண்டு வரமுடியும்.
இவ்வாறு, அவர் கூறினார்.