/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'சைரன்' பொருத்திய ரோந்து வாகனம்; பெரியகுளத்தில் கண்காணிப்பு தீவிரம்
/
'சைரன்' பொருத்திய ரோந்து வாகனம்; பெரியகுளத்தில் கண்காணிப்பு தீவிரம்
'சைரன்' பொருத்திய ரோந்து வாகனம்; பெரியகுளத்தில் கண்காணிப்பு தீவிரம்
'சைரன்' பொருத்திய ரோந்து வாகனம்; பெரியகுளத்தில் கண்காணிப்பு தீவிரம்
ADDED : மே 29, 2024 12:52 AM

கோவை;உக்கடம் பெரியகுளத்தில் 'சைரன்', 'மைக்' பொருத்தப்பட்டுள்ள ரோந்து வாகனங்கள் வாயிலாக, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசின் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், கிருஷ்ணம்பதி, குமாரசாமி குளம், குறிச்சி குளம் உட்பட ஏழு குளங்கள் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. பூங்காக்கள், நடைபாதை உள்ளிட்ட அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இக்குளக்கரைகளை பராமரிக்க, போதிய உபகரணங்கள் இல்லாததுடன், கண்காணிப்பு இல்லாததால் இரவு மட்டுமின்றி பகல் நேரத்திலும், காதல் ஜோடிகளின் அத்துமீறல் காண்போரை முகம் சுழிக்க வைக்கிறது.
இதையடுத்து, சிறிய 'எலக்ட்ரிக்' ரோந்து வாகனம், நடைபாதை சுத்தம் செய்யும் இயந்திரம் உள்ளிட்டவை தற்போது பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
உக்கடம் பெரியகுளம், மூன்று சக்கரங்கள் பொருத்தப்பட்ட இரு ரோந்து வாகனங்கள் வாயிலாக கண்காணிக்கப்படுகிறது. இந்த வாகனத்தில், 1.5 அடி உயரத்தில் நின்றுகொண்டே சுற்றிலும் நடக்கும் சம்பவங்களை, கண்காணிக்க முடியும்.
சைரன், மைக் மூலம், ரோந்து செல்லும் பணியாளர்கள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அத்துமீறல்கள் அதிகம் நடக்கும் வாலாங்குளத்திலும், இந்த ரோந்து வாகனம் உள்ளிட்ட வசதிகளை விரைந்து ஏற்படுத்த, கோரிக்கை எழுந்துள்ளது.